கிளி. முல்லை மாவட்டங்கலில் கிராமிய வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கிராமிய வீதிகள் பாலங்கள் புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று(28) மாலை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கிராமிய வீதி மற்றும் பாலங்களின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதில் முன்னுரிமைபடுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
குறித்த கலந்துரையாடலில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லை மன்னார் மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் , கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கிராமிய மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.