பெண்ணின் சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற ஹமாஸ்., புகைப்படத்திற்கு சிறப்பு விருது., கிளம்பிய சர்ச்சை
காசாவின் தெருக்களில் பெண்ணின் சடலத்தை ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டதற்காக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகை சிறப்பு விருதை வென்றது.
ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷானி லூக் என்ற 22 வயது பெண், அக்டோபர் 7-ஆம் திகதி ஹமாஸால் கடத்தப்பட்டார். ஆயுதமேந்திய ஆட்கள் நிரம்பிய பிக்அப் டிரக்கின் பின்புறத்தில் அரை நிர்வாணமாக மயங்கிக் கிடக்கும் அப்பெண்ணின் புகைப்படம் ஒன்று வெளியானது.
இந்தப் புகைப்படம் ஹமாஸ் குழுவினரின் காட்டுமிராண்டித்தனமான செயலை சுட்டிக்காட்டியது.
அப்பெண் அக்டோபர் 7-ஆம் திகதி சூப்பர்நோவா இசை விழாவில் கலந்து கொண்டார். அங்கு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக்கொன்றனர்.
இதில் சுமார் 360 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் கடத்தப்பட்டனர். அதில் ஒருவராக அப்பெண் இருந்துள்ளார்.
பின்னர் மண்டை ஓட்டின் ஒரு பகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில், ஷானி லூக் அக்டோபர் 30 அன்று இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் இன்னும் காஸாவில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நியூயார்க் போஸ்ட் படி, Missouri School of Journalism-ல் Donald W Reynolds Journalism Institute நடத்தும் ‘Team Picture Story of the Year’ விருது வழங்கப்பட்டது.
படத்தைப் பார்த்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதரகத்தின் முன்னாள் பேச்சு எழுத்தாளரான அவிவா க்ளோம்பாஸ், படத்தைக் கிளிக் செய்ததற்காக புகைப்படக்காரரைத் தண்டிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மற்ற சமூக ஊடக பயனர்கள் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் இது அருவருப்பானது என்றும் அவர் கூறினார்.