;
Athirady Tamil News

என் தந்தை எம்.ஆர்.ராதா இருந்தால் பாஜகவில் சேர்ந்தது பற்றி என்ன சொல்லியிருப்பார்? ராதிகா விளக்கம்

0

ராதிகா சரத்குமார் பாஜகவுடன் இணைந்தது பற்றி எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார் என்று அவரே தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ராதிகா விளக்கம்
இந்நிலையில், நீங்கள் பாஜகவுடன் இணைந்தது பற்றி உங்களது தந்தை எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார் என்று ராதிகா சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “நான் எனது தந்தையிடம் அரசியல் குறித்து பேசியது இல்லை. அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடன் நான் மலேசியா போன்று பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அவர் அங்குள்ள மக்களுடன் பேசும் போது ஊருக்கு திரும்ப வரவேண்டாம் என்று கூறுவார்.

உங்கள் வாழ்க்கை தரம் இங்கு நன்றாக இருக்கிறது, இங்கேயே இருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

இன்று மக்களின் வாழ்க்கை தரத்தை இந்திய அரசு உயர்த்துகிறது. அதனால் கண்டிப்பாக எனது தந்தை அதை பாராட்டியிருப்பார்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.