மொஸ்கோ பயங்கரம்: வெளிநாட்டு உதவியை நாடும் பிரான்ஸ்
பாரீஸில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் தனது நட்பு நாடுகளில் இருந்து காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பை உறுதி படுத்துவதற்கு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 22 ஆம் திகதி ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் பயங்கர தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றது, அதில் நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு பலர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
இராணுவ வீரர்கள்
இந்நிலையில், பாரீஸில் ஒலிப்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதால் போட்டிகளின் போது பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தோடு, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம், சில குறிப்பிட்ட சிறப்புப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக, குறைந்த எண்ணிக்கையிலான இராணுவ வீரர்களை அனுப்பித் தருமாறும் வெளிநாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.