அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் இளவரசி கேட்டின் புற்றுநோய் வீடியோ!
இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் கண்டறிதல் குறித்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் (Kate Middleton) சமீபத்தில் தனது புற்றுநோய் குறித்து வெளியிட்ட வீடியோ உலகளவில் வைரலானது.
தைரியமாக புற்றுநோய் குறித்து பேசியதுடன் தனது குழந்தைகளுக்கும் அதனை கேட் தெளிவுப்படுத்தியது பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில், இளவரசி கேட்டின் புற்றுநோய் குறித்த வீடியோ அமெரிக்கர்களின் சொந்த ஆரோக்கியத்தில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
இந்த வாரம் பல சுகாதார நிலையங்கள் சேகரித்த தரவுகள் மூலம் ‘புற்றுநோய் அறிகுறிகள்’ குறித்த ஒன்லைன் தேடல்கள் 65 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒன்லைன் தேடல்
அத்துடன் டெய்லிமெயில்.காம் சேகரிக்கப்பட்ட தரவு மூலம் ‘Abdominal’ அறுவை சிகிச்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஒன்லைனில் தேடப்படுவது 2,000 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என தெரிகிறது.
அதேபோல் ‘கருப்பை புற்றுநோய் முன்கணிப்பு’க்கான தேடல்கள் 1,550 சதவீதமும், ‘வயிற்று புற்றுநோய் முன்கணிப்பு’ 900 சதவீதமும் அதிகரித்துள்ளன.
மேலும் தடுப்பு சுகாதார தேடல்கள் 90 சதவீதமும், முன் கணிப்பு 60 சதவீதமும் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள், தற்போது கிடைக்கப்பெற்ற தேடல் தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம், ‘புற்றுநோய் அறிகுறிகள்’ மற்றும் ‘புற்றுநோய் சோதனைகள்’ பற்றிய விசாரணைகளும் கேட்டின் வீடியோவுக்கு பின் முறையே 41 சதவீதமும், 40 சதவீதமும் உயர்ந்துள்ளன.
இதுகுறித்து புற்றுநோயியல் நிபுணரான மருத்துவர் டேனியல் லாண்டவ் கூறும்போது, நோயாளிகள் தங்கள் உடலுடன் மிகவும் இணக்கமாக மாறிவிட்டனர் மற்றும் பலர் தங்கள் அறிகுறிகள் புற்றுநோயாக இல்லை என்று உறுதியளிக்க விரும்புகின்றனர் என்றார்.
இதன்மூலம் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நோயாளிகள் மற்றும் வல்லுநர்கள் ஒரே மாதிரியாக நன்றி தெரிவித்து இளவரசி கேட்டிற்கு ஆதரவு பெருகியது.