கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு
video-https://wetransfer.com/downloads/783f2dfcfd824501f6654d00e8769c3e20240331061501/94756a?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் படசாலை சபா மண்டபத்தில் இன்று(30) மாலை நடைபெற்றது.
இதன் போது அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் .எம்.எஸ்.சஹுதுல் நஜீம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் ஜாபீர் முன்னாள் அதிபரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.ஏ. கபூர் கல்முனை கல்வி வலய கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.றியால் கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினருமான யூ.எல்.என். ஹுதா உமர் ஏனைய அதிதிகளாக கலந்த கொண்டதுடன் இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி அல் ஹாபிழ் கியாஸ் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.