;
Athirady Tamil News

நாளொன்றுக்கு வீணாகும் உணவு : ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

உலகளாவிய ரீதியில் உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஐந்தில் ஒரு பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளில் 63 கோடி தொன், உணவகங்களில் 29 கோடி தொன் மற்றும் சில்லறை கடைகளில் 13 கோடி தொன் என உலக அளவில் 105 கோடி தொன் உணவு விரயம் செய்யப்படுகிறது.

வீணாகும் உணவு
உலக அளவில் வீடுகளில் ஒரு நாள் வீணாகும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடிவதுடன் அதிக வெப்ப நிலை நிலவும் நாடுகளில் உள்ள வீடுகளில் தனிநபர் உணவு விரயம் அதிகமாக உள்ளது.

மேலும் அதிக வெப்ப நிலையால் உணவை சேமித்து வைப்பது அங்கு சவாலாக உள்ளதால் உணவு விரயமாவது அதிகம் நிகழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் செயல் இயக்குநர் ஆண்டர்சன் தெரிவிக்கையில், உணவுவிரயம் என்பது உலக அளவில் நிகழ்ந்து வரும் துயரமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

பசியில் வாடும் மக்கள்
அத்தோடு இலட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பசியில் வாடும் சூழலில் உணவுகள் எந்தக் கணக்குமின்றி வீணாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் சார்ந்தும் இது பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இதில் ஆறுதலான விஷயமாக நாடுகள் நினைத்தால் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையால் உலக நாடுகள் உணவு விரயத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டியது அவசியம் என ஆண்டர்சன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.