இந்தியாவை ஆளும் சீனா! தீவிரமடையும் சர்ச்சைகள்
இந்தியாவின் (India) அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது.
இதன்படி, 11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா (China) புதிய பெயர் சூட்டியுள்ளது.
கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட “ஸங்னங்” (Zangnan) பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.
சீன ஆளுகை
இதற்கமைய, ஏற்கனவே கடந்த 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியிருந்தது.
இந்த நிலையில், தற்போது நான்காவது முறையாகவும் அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது.
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி வருவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளது.
உரிமை மாறாது
இந்த நிலையில், இடத்தின் பெயரை மாற்றுவதால் மாத்திரம் அதன் உரிமை மாறிவிடாது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் என அவர் கூறியுள்ளார்.