;
Athirady Tamil News

யாழில்.காணி மோசடி வழக்கு – அறிக்கையை திருத்திய பொலிஸார்

0

காணி மோசடி வழக்கில் நீதிமன்றை தவறாக வழிநடத்தி, நீதிமன்ற அதிகாரத்தை கீழ்மைப்படுத்தினார்கள் என போலீசாருக்கு எதிராக சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை யாழ்.நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

காணி மோசடி சம்பந்தமான வழக்கொன்றில் , சட்டத்தரணி வீ. கௌதமன் நீதிமன்றில் முன் பிணை பெற்றுள்ளார்.

அந்நிலையில் பொலிஸார் மன்றில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில், “மனுதாரர் தான் செய்த குற்றத்தை உணர்ந்து , பொலிஸார் தன்னை எந்நேரமும் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் பிணை விண்ணப்பத்தை செய்தார் ” என குறிப்பிட்ட வாசகம் , நீதிமன்றால் ஆக்கப்பட்ட கட்டளையை வேண்டும் என்றே தவறாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வீ.கௌதமன் சார்பில் பிறிதொரு சட்டத்தரணியால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற போது, தம்மால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் , மனுதாரர் சுட்டிக்காட்டிய வாசகத்தை திருத்தம் செய்து மேலதிக அறிக்கையை தாக்கல் செய்வதாக , பொலிஸார் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து எதிர் மனுதாரர்களான பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய இருவரையும் சொந்த பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் வழக்கை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.