ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருணா – பிள்ளையானை உடனடியாக கைது செய்ய வேண்டும்: யோகேஸ்வரன் காட்டம்
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena), கருணா அம்மான் (Karuna Amman) மற்றும் பிள்ளையான் (Pillaiyan) ஆகியோரை உடன் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் (Seeniththamby Yogeswaran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் (Batticaloa) நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
அவர் மேலும் தெரிவித்ததாவது, ” ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கருணா அம்மான், பிள்ளையான் ஆகிய இவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது.
ஆகவே, இவர்கள் 3 பேரையும் கூட்டாக கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும்.
எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடாத்த வேண்டும். கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு தேர்தல் நெருங்குகின்றது.தேர்தலுக்கான நாடகம்.” என தெரிவித்துள்ளார்.