யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த தகவலால் திகைப்பு!
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் தென்னிலங்கை குடும்பம் ஒன்று தொடர்பிலான தகவல் வெளியாகி பல்லருக்கும் திகைப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கணவன், மனைவி, பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தே குறித்த குடும்பம் பிச்சயெடுத்து வீடு கட்டவரும் தகவல் பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாளொன்றுக்கும் செலவுபோக 30 000 ரூபா கையிருப்பு
யாழ்ப்பண நகர் பகுதியில் சிறுவர்கள் சிலர் யாசகம் பெற்றுவந்த நிலையில் பலர் அந்தப் பிள்ளையளுக்குக் பணம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நபர் ஒருவர் , சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்க , பொலிஸார் பிள்ளைகளிடம் நடத்திய விசாரணையில் பெற்றோர்களும் சிக்கியுள்ளனர்.
பெற்றோர்களை அழைந்த்து வந்த பொலிஸார், ‘இப்பிடி சின்னப்பிள்ளையளை வைச்சு பிச்சை எடுக்கிறது குற்றம். ஏன் அப்பிடி செய்தனீங்கள்? என கேட்டபோது அவர்கள் கூறிய பதிலால் பொலிஸார் ஆடிப்போயுள்ளனர்.
அதாவது தாங்கள் கொழும்பு வத்தளையில் வசிப்பவர்கள் என்றும், அங்கு சொந்தமா வீடு கட்டிக்கொண்டிருப்பதாகவும் , அதற்காகவே தாம இப்பிடிக் குடும்பத்தோட யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பிச்சை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
சொகுசு ஹோட்டலில் வாழ்க்கை
அதோடு தங்கள் செலவுபோக ஒருநாளைக்கு முப்பதாயிரம் ரூபா சேமிப்பதாகவும் தெரிவித்த குழந்தைகளின் பெற்றோர், பத்துப் பதினைஞ்சு நாள் இஞ்ச யாசகம் பெற்ற பின்னர் அந்தக் காசைக் கொண்டு போய் வீடுகட்டுற வேலையை பார்பதாகவும், அந்த காசு முடிய மறுபடியும் யாசகம் பெற செல்வதாகவும் தம்பதிகள் கூறியுள்ளனர்.
அதோடு யாழ்ப்பாணத்தில மட்டுமல்லாது , ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு பிரதேசத்திற்கு தாம் பிச்சை எடுக்க செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் வீடுகட்டும் கதையைம் நம்பாத யாழ்ப்பாண பொலிஸார் , அது தொடர்பில் வத்தளைப் பொலிசாருக்கு தெரியப்படுத்த, அப்பிடி ஒரு வீடு கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது உண்மைதான் என வத்தளைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளார்களாம்.
அதேவேளை குறித்த குடும்பம் யாழ்ப்பாணத்தில உள்ள பெரிய ஹொட்டலில் அறை ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அன்றாடம் ச்சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் பலர் இருக்கையில் , தென்னிலங்கை குடும்பம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து, கொழும்பில் வீடுகட்டும் சம்பவம் சமூகவலைத்தள வாசிகளை திகைக்க வைத்துள்ளது.