பின்லாந்தில் விபரீதம்: பாடசாலை மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன்
பின்லாந்து ஆரம்ப பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பின்லாந்தில், வன்டா நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 வயதுடைய 3 மாணவர்கள் காயமடைந்திருந்ததையடுத்து அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, 12 வயது மாணவன் ஒருவனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு
பிரித்தானிய நேரப்படி, காலை 8.08 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, அந்த பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.