சுவிஸ் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி: புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் தரையிறக்கம்
அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்ட சுவிஸ் ஏர்லைன்ஸ் விமானமொன்று மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானத்தில் பயணியொருவர் முரண்பட்டுள்ளதுடன் பணியாளர்களை தாக்கியதையடுத்து விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானமானது, கடந்த ஞாயிற்கு கிழமை அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலிருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கிப் புறப்பட்ட நிலையில் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
அதனை தொடர்ந்து, விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை, சந்தேகநபர் தாக்கியதில் காயமடைந்த விமானப் பணியாளர் ஒருவர் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.