;
Athirady Tamil News

முதலில் உங்கள் மனைவியின் சேலைகளை எரியுங்கள்; பெண் பிரதமர் சீற்றம்!

0

வங்காள தேசத்தில் இந்திய பொருட்களை எதிர்ப்பவர்களுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

வங்காள தேசத்தில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் (boycott of Indian products) என்ற எதிர்ப்பு பிரசாரம் தற்போது கிளம்பி வருகிறது.

சமூக ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் (influencers) மட்டும் எதிர்க்கட்சியின் சில தலைவர்கள் இவ்வாறு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்திய பொருட்கள் புறக்கணிப்பு
இந்நிலையில் இது குறித்து, அவாமி லீக் கட்சியின் தலைவரும், வங்காளதேச பிரதமருமான ஷேக் ஹசீனா இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில்,

இந்திய தயாரிப்பு பொருட்களை எதிர்க்க வேண்டும் என சொல்பவர்களுக்கு என்னுடைய ஒரே கேள்வி, எவ்வளவு இந்திய சேலைகள் உங்களுடைய மனைவிகள் வைத்துள்ளார்கள்.

அந்த சேலைகளை ஏன் உங்கள் மனைவியிடம் இருந்து வாங்கி இன்னும் தீ வைத்து எரிக்காமல் உள்ளீர்கள் என்பதுதான்.

கரம் மசாலா, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் அனைத்து வாசனை திரவியங்கள் இந்தியாவில் இருந்து வருகிறது. இவைகள் அனைத்தும் வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர்களின் வீட்டின் சமையலறையில் பார்க்கக்கூடாது.

வங்காளதேசம் தேசியவாத கட்சி ஆட்சியில் இருந்தபோது மந்திரிகள் மட்டும் அவர்கள் மனைவியர் இந்தியாவிற்கு சென்றபோது அங்கிருந்து சேலைகளை வாங்கி வங்காள தேசத்தில் விற்பனை செய்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வங்காளதேசத்தின் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவதற்கு துணை செய்ததாகவும், ஷேக் ஹசீனா பிரதமராவதை இந்தியா விரும்புவதாகவும் வங்காளதேச எதிர்க்கட்சி குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் என்பதை ஊக்குவிக்கும் தொடர்பாக வங்காளதேசம் தேசிவாத கட்சி தலைவர் ருகுல் கபீர் ரிஸ்வி காஷ்மீர் சால்வே-ஐ சாலையில் தூக்கி எறிந்த நிலையில் ஷேக் ஹசீனா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.