ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை
ரொறன்ரோவில் பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் ரொறன்ரோவில் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும், பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரந்திய வலயம் முழுவதிலும் மழை பெய்யும் என சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை 25 முதல் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.