பிரான்சில் மாயமான குழந்தை: ஆவிகளுடன் பேசும் நபர் கூறிய தகவல்
பிரான்சில் மாயமான இரண்டு வயது சிறுவன் ஒருவனின் உடல் பாகங்கள் ஒன்பது மாதங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவம் தொடர்பான சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆவிகளுடன் பேசும் நபரின் உதவி
பிரான்சிலுள்ள Le Vernet என்னும் கிராமத்தைச் சேர்ந்த Emile Soleil என்னும் இரண்டு வயதுச் சிறுவன், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனான்.
சிறுவனின் உடலைத் தேடு முயற்சியில் ஈடுப்பட்டிருந்தவர்களில் ஒருவர், Maj Dames (74). ஆவிகளுடன் பேசும் திறன்கொண்டவரான Dames, அக்கிராமத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவனது உடல் கிடைக்கலாம் என பொலிசாருக்கு ஏற்கனவே தெரிவித்ததாக கூறுகிறார்.
விடயம் என்னவென்றால், பொலிசாரும் கிராம மக்களும் அந்த பகுதியை கடந்த ஆண்டே சல்லடை போட்டுத் தேடியும் Emileஉடைய உடல் கிடைக்கவில்லை.
நீடிக்கும் மர்மம்
இந்நிலையில், சனிக்கிழமையன்று, மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர், உயிரற்ற குழந்தை ஒன்றின் உடல் பாகங்களைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்த நிலையில், அது Emileஉடைய உடல் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆக, அந்த உடல் எப்படி அங்கு வந்தது என கேள்வி எழுந்தது. அது மக்கள் நடமாடும் பகுதி, இலையுதிர்காலத்தில் அங்கு மக்கள் மரம் வெட்டுவது வழக்கம்.
பொலிசார், மோப்ப நாய்கள் உதவியுடன் அந்த பகுதியை சல்லடை போட்டு தேடினார்கள்.
ஆக, இவ்வளவு நாட்களாக கிடைக்காத Emileஉடைய உடல் தற்போது கிடைத்துள்ளதானால், அதை யாரோ இப்போது அங்கு கொண்டு போட்டிருக்கலாம் என கிராம மக்கள் கருதுகிறார்கள்.
தற்போது Emileஉடைய உடல் பாகங்கள் சில கிடைத்துள்ளதால், Emileக்கு என்ன ஆனது என்பதைக் கண்டுபிடிக்க, அவை பொலிசாருக்கு உதவியாக இருக்கும் என்பதால், வழக்கு விசாரணையை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளார்கள்.