இளவரசர் ஹரிக்கு பாட்டி விட்டுச் சென்றுள்ள சொத்து: அண்ணன் வில்லியமைவிட அதிகமாம்
பிரித்தானிய மகாராணியான எலிசபெத்தின் தாயாகிய முதலாம் எலிசபெத், பேரப்பிள்ளைகள் மீது அதீத அக்கறை கொண்டவராம். தான் வாழும் காலத்திலேயே, தன் பேரப்பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுக்காக ஒரு பெருந்தொகையை வைத்துவிட்டுப் போயிருக்கிறாராம்.
22 ஆண்டுகளுக்கு முன்
ராணி முதலாம் எலிசபெத், 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மறைந்துள்ளார். தனது பேரப்பிள்ளைகளுடைய நிதி நிலைமை குறித்து அப்போதே யோசித்த அவர், அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, அதில் அவர்களுக்காக பெருந்தொகை ஒன்றை வைத்துச் சென்றுள்ளார்.
அவர் தனது 101ஆவது வயதில் மரணமடையும்போது, அந்த நிதியில், வில்லியம், ஹரிக்காக 14 மில்லியன் பவுண்டுகள் இருந்துள்ளது.
அண்ணன் வில்லியமைவிட ஹரிக்கு அதிகமாம்!
விடயம் என்னவென்றால், அந்த நிதியில், இளவரசர் வில்லியமை விட ஹரிக்கு அதிக பங்கு உள்ளதாம். அதற்குக் காரணம் என்னவென்றால், சார்லஸ் மன்னரானதும் வில்லியம் வேல்ஸ் இளவரசராகிவிடுவார். அப்போது, மன்னருக்கு சொந்தமான Duchy of Cornwall என்னும் எஸ்டேட் வில்லியமுக்கு சொந்தமாகிவிடும். அத்துடன், வில்லியம் அடுத்த வாரிசு என்பதால் வேறு பல சொத்துக்களும் அவருக்குக் கிடைக்கும்.
இளவரசர் ஹரி மன்னராக வாய்ப்பில்லை என்பதால், அவருக்கு இதெல்லாம் கிடைக்காது. இதையெல்லாம் நினைத்துப் பார்த்துதான் அவருக்கு வில்லியமை விட பெரிய தொகை ஒன்றை ஒதுக்கி வைத்துச் சென்றுள்ளாராம் ராணி முதலாம் எலிசபெத்.
இன்னொரு முக்கிய விடயமும் உள்ளது. இளவரசி டயானாவும் தனது பிள்ளைகளுக்காக ஒரு பெரிய தொகையை வைத்துப் போயிருக்கிறார். அவர்களுக்கு 20 வயது ஆனதும், அந்த தொகை தானாகவே அவர்களைச் சேர்ந்துவிடும்.
ஆக, பலரும் நினைப்பதுபோல ஹரி அமெரிக்காவில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை, மிகவும் சந்தோஷமாக தங்கள் பிள்ளைகளுடன் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறது பிரித்தானிய ஊடகமான தி மிரர்.