இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைய நல்ல வாய்ப்பு: ஆனால் ஒரே பிரச்சினை இவர்தான்
தனது தந்தையும் மனைவியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இளவரசர் வில்லியம் மன அழுத்தத்துக்கும் கவலைக்கும் ஆளாகியுள்ள நிலையில், இது ஹரியும் வில்லியமும் இணைய நல்ல வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
ஒரு நல்ல வாய்ப்பு
ஆனால், அண்ணனும் தம்பியும் இணைய தடையாக இருப்பது ஹரியின் மனைவி மேகன் மட்டுமே என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ரிச்சர்ட் (Richard Fitzwilliams) என்பவர்.
இளவரசர் ஹரி இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளுக்காக மே மாதம் பிரித்தானியா வர இருக்கிறார். அப்போது, ஹரி மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வருமாறு வில்லியம் கேட் தரப்பிலிருந்து ஹரி மேகனுக்கு செய்தி ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, இது அண்ணனும் தம்பியும் இணைய ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார் ரிச்சர்ட்.
தடையாக இருக்கும் ஒரே நபர்
ஆனால், அதற்கு மேகன் தடையாக இருக்கக்கூடும் என்று கூறும் ரிச்சர்ட், மேகன் பிரித்தானியாவில் பிரபலமில்லை, ஹரியும் அப்படித்தான், ஆனால், அவரது விடயம் வேறு என்கிறார்.
அதே நேரத்தில், மேகன் ஹரியுடன் பிரித்தானியாவுக்கு வரவில்லையானால், அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார் ரிச்சர்ட்.
ஆக, ஹரி மேகன் குடும்பம் பிரித்தானியாவுக்கு வருவது மேகன் கையில்தான் உள்ளது என்று கூறும் ரிச்சர்ட், ஹரிக்கு தன் குடும்பத்துடன் இணைய விருப்பம் உள்ளது, ஆனால், மேகன் பிரித்தானியாவுக்கு வர விரும்பவில்லையானால், அவரை யாரும் வற்புறுத்தமுடியாது. அத்துடன், மேகன் வரவில்லையென்றால், ஹரி தன் மனைவியை விட்டு விட்டு பிள்ளைகளுடன் மட்டும் பிரித்தானியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்கிறார்.