துருக்கியில் பாரிய தீ விபத்து : 29 பேர் பரிதாபமாக பலி
துருக்கியின் மத்திய இஸ்தான்புல் நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்தானது நேற்று (02.03.2024) மத்திய இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள Masquerade இரவு விடுதியிலேயே ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
தகவல் அறிந்து சம்பவயிடத்தில் குவிக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து அவசர மருத்துவ உதவிக் குழுவினர் விடுதிக்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக தீ விபத்து ஏற்பட்ட இரவு விடுதியானது சீரமைப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டிருந்துள்ளது.
மேலும் தீ விபத்து ஏற்பட்ட இரவு விடுதியின் முகப்பு வாசல் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் விபத்துக்கு காரணமானவர்கள் என குறிப்பிட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேர்கள் கைதாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
16 மாடிகள் கொண்ட குடியிருப்பு வளாகத்தின் தரைத்தளத்திலேயே குறித்த இரவு விடுதியானது அமைந்துள்ளது.
அத்துடன் 8 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதை அடுத்து 7 பேர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.