கட்டுநாயக்க பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம்: இருவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்க, ஆண்டியம்பலம் (Katunayaka) பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 07 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சீதுவ வைத்தியசாலைக்கு முன்பாக போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸார் விசாரணை
அதன்படி, அந்த இடத்தை சோதனை செய்தபோது, 550 போதை மாத்திரைகளுடன் அதனை நடத்தி வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 19 மற்றும் 42 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், ஆடியம்பலம் மற்றும் சீதுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.