கிளிநொச்சியில் மாணவர்களிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தின் புனித பற்றிமா றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் மாணவர்களின் தேவை அறிந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்று(02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில், சுத்தமான குடிநீர் பெறுவதில் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தநிலையில், இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குடிநீர் விநியோகத் திட்டம் இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விக்ரமசிங்க அவர்களின் கரங்களால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இப்பகுதியில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட உயர் இராணுவ அதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கிராம சேவையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.