சாரதி அனுமதி பத்திரம் பெற மாணவர்களுக்கு புதிய வசதி
சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு எழுத்துத் தேர்வில் பங்கேற்காமல் உரிமம் பெறும் சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வீதி பாதுகாப்பு மன்றங்களில் செயற்படும் மாணவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
பாதுகாப்பு மன்றங்களில் ஓட்டுநர் திறன் பதக்கம் பெறும் ஒவ்வொரு உயர்தரப் பாடசாலை மாணவர்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பங்கேற்காமல் நடைமுறைப் பரீட்சைக்கு வர முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
பாடசாலை வீதி பாதுகாப்பு மன்றங்கள் மற்றும் பரிசளிப்பு திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஆரம்ப பிரிவு முதல் உயர்நிலை மாணவர்கள் வரை பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
இது தவிர பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் ஏனைய மாணவர்களைக் காட்டிலும் பல்கலைக்கழகங்களுக்குத் தகுதிபெறும் போது ஜனாதிபதி பதக்கம் வரை உழைக்கும் மாணவர்களுக்கு அதிக புள்ளிகளை வழங்கும் முறைமையையும் இந்த மன்றங்கள் அமைக்கவுள்ளன.
இந்தப் பதக்கங்கள் வழங்கும் முறையானது பாடசாலை ஆசிரியர் ஊழியர்கள் மற்றும் பிரதேச மட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் நடைபெறவுள்ளது. அத்துடன், இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சரினால் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.