சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு – 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின்படிப்புகள் பீடமும், கலைப்பீடத்தின் கல்வியியல்துறையும் இணைந்து முன்னெடுக்கும் முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாடு – 2024 எதிர்வரும் ஏப்ரல் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா தலைமையில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் கானொலி இணைப்பு : https://we.tl/t-RFOx9d6MOS
முழுமையான விவரங்கள் அடங்கிய ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.