உலகின் மிக வயதான நபர் காலமானார்
உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜுவான் வின்சென்ட் பெரெஸ் மோரா(Juan Vicente Perez Mora) காலமானார்.
குறித்த விடயத்தை வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தனது எக்ஸ்(x) கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், உலகிலேயே மிகவும் வயதான மனிதரான இந்த நபர் நேற்றுமுன் தினம் (02) இரவு மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.
உலக சாதனை
11 பிள்ளைகளின் தந்தையான இவர் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த போது அவருக்கு 41 பேரக்குழந்தைகளும் 30 கொள்ளு பேரக்குழந்தைகளும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Juan Vicente Pérez Mora ha trascendido hacia la eternidad a sus 114 años, tachirense del poblado de El Cobre que le regaló a Venezuela el Récord Guinness por ser el hombre más longevo del mundo. Envío mi abrazo y condolencias a sus familiares y a todo el pueblo de El Cobre estado… pic.twitter.com/ieVPosm8dt
— Nicolás Maduro (@NicolasMaduro) April 3, 2024
அதேவேளை, ஜுவான் வின்சென்ட் பெரெஸ் மோரா உலகின் வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 திகதி இடம்பிடித்துள்ளார்.அதன் போது அவருக்கு வயது 112 வயது 253 நாட்கள் என கூறப்படுகிறது.