தைவானை விட்டுவைக்காத சீனா: தொடரும் பதற்றம்
சீனாவின் 30 இராணுவ விமானங்கள் மற்றும் 9 கடற்படை கப்பல்கள் இன்று காலை தைவான் நாட்டை சுற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,நேற்று முன் தினம் (02) காலை 6 மணி முதல் நேற்று(03) காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில், தைவானின் வடக்கு மத்திய பகுதியில் மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு மண்டல பகுதியிலும் சீனாவின் 20 விமானங்கள் நுழைந்தாக தெரிவிக்கப்படுகிறது.
தைவானை சீனாவானது, தனது ஒருங்கிணைந்து பகுதியாக பார்த்து வருகிறது, ஆனால் தைவான் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகின்றதுடன் அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
அத்துமீறல்கள்
இந்நிலையில், ஆத்திரமடைந்துள்ள சீனா, அவ்வப்போது தைவானை சுற்றி இராணுவ நடவடிக்கைகளை தீவிரபடுத்தி வருகிறது.
அத்தோடு, சீனாவின் இந்த அத்துமீறலான செயற்பாடுகளை தைவான் ஆயுத படைகள் உற்று கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.