;
Athirady Tamil News

உலகம் எப்போது அழியும்… 2024 தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பு

0

பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பின்படியே 2024 ல் உலக அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவுகள்
இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு உட்பட பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ள பாபா வங்கா, 2024 தொடர்பிலும் தமது கணிப்பினை பதிவு செய்துள்ளார்.

2024ல் கடுமையான வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம் என பாபா வங்கா கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், உலகளாவிய வெப்ப அலைகள் 67 சதவிகிதம் அடிக்கடி நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வெப்ப அலைகளின் அதிகபட்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2024ல் கடும் வெப்ப அலைகளுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவே அறிவியல் ஆய்வுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவும் பாபா வங்காவின் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1996ல் பாபா வங்கா மரணமடையும் போது இணைய சேவை என்பது ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால், 2024ல் சைபர் தாக்குதல் பெருமளவு நடந்தேறும் என்பதை அவர் கணித்துள்ளார்.

பொருளாதார தடைகள்
கடந்த 12 மாதங்களில், ஆப்பிள், மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் இணைய பாதுகாப்பு மீறல் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளன. 2024ல் மிக தீவிரமான பொருளாதார நெருக்கடிகளை உலகம் எதிர்கொள்ளும் என பாபா வங்கா கணித்துள்ளார்.

ஏற்கனவே இந்த ஆண்டு, மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தொடர்ச்சியான பணவீக்கத்துடன் போராடி வருகின்றனர். மந்தமான உள்நாட்டு நுகர்வு காரணமாக 2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் ஜப்பான் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

சீனாவும் பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. ஐரோப்பாவில் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் பாபா வங்கா எச்சரித்துள்ளார். மட்டுமின்றி முதன்மை நாடொன்று உயிரியல் ஆயுதங்களை சோதனை அல்லது தாக்குதலுக்கு பயன்படுத்தும் என்றும் 2024 தொடர்பில் பாபா வங்கா கணித்துள்ளார்.

பாபா வங்காவின் கணிப்புகள் 5079ம் ஆண்டுடன் முடிவடைவதால், உலகம் முடிவுக்கு வரும் என்றே விளக்கமளிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.