வாழைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா?
நமது உடலுக்கு தாவரங்களால் பெரிதும் நன்மை கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கக்கூடிய மருத்துவ குணம் உள்ள தாவரம் வாழைப்பூவாகும்.
இந்த வாழைப்பூவில் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கின்றன. பொதுவாக வாழை மரம் என்றாலே அதன் எல்லா பாகமும் எமக்கு நன்மையை விட வேறொன்றும் தராது.
இந்த வாழைப்பூவில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துகள் உள்ளன. இந்த சத்துக்களை வைத்து இது உடலில் எந்தெந்த நோய்க்கு தீர்வாக இருக்கின்றது என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பூ
வாழைப்பூ அதிகம் சாப்பிட்டால் உடலில் தொற்று என்பது ஏற்படாது. புற்று நோய் வரக்கூடிய கலங்களை இது முதல் கட்டத்திலேயே இல்லாமல் அழித்து விடுகிறது.
ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் அது அவர்களின் ரத்த விருத்தியை அதிகரிக்க செய்யும். இதனால் சிவப்பு ரத்த அணுக்கள் அதிகமாகும்.
மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலியால் சிரமப்படும் பெண்கள் இந்த பூவை வேக வைத்து சாப்பிட்டால் இந்த பிரச்சனை குணமாகும்.
இந்த நேரத்தில் உண்டாகக் கூடிய ரத்த போக்கை இந்த வாழைப்பூ குறைத்து விடும். இது சருமத்தை காப்பதுடன் வயது முதிர்ச்சியையும் தள்ளி வைக்கிறது.
இந்த பூவால் சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து விடுகின்றன. இதற்காக நீங்கள் இந்த பூவின் குருத்தை சாப்பிட்டு வர வேண்டும்.