இலங்கையில் செயற்படும் போதைப்பொருள் வலையமைப்பு: பலர் அதிரடியாக கைது
இலங்கையில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் ஈடுபட்டுள்ள 6,500 பேர் பெயரளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களில் 4,500 பேர் ஏற்கனவே ஆபரேஷன் ஜஸ்டிஸின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதுடன், போதைப்பொருள் பாவனையை குறைப்பதற்கான வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட மேலும் 07 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.