நூல் வெளியீட்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின், அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் – 6 நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அரசறிவியல் ஒன்றியத் தலைவர் சு.டிலக்சன் தலைமையில் இந் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், கௌரவ விருந்தினராக அரசறிவியற்துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசறிவியலாளன் இதழ் -6 நூலினை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கலைப்பீட பீடாதிபதி ஆகியோர் இணைந்து வெளியீட்டு வைத்தார்.