மின்கம்பத்தில் கணவனை கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த மனைவி! அதிர்ச்சி சம்பவம்
மாத்தறையில் மது போதையில் வீட்டுக்கு சென்ற கணவரை மனைவி கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் நாளாந்தம் மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்று தனது மனைவியை தாக்குவதனை வழக்கமாக கொண்டவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இவர் கடந்த 2 ஆம் திகதி அன்று வழமைபோல குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து இவரது மனைவி மற்றும் சிலர் இணைந்து கணவனை வீட்டிற்கு முன்பாக உள்ள கம்பத்தில் கட்டிவைத்து பலமாக தாக்கியுள்ளனர்.
காயமடைந்த கணவர் மயங்கிய நிலையில் வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவரை கட்டி வைத்திருந்த கயிறு கழுத்தில் நெரிக்கப்பட்டதால் இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனையடுத்து சந்தேக நபரான மனைவி வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.