யாழ்ப்பாணத்தில் அனுர குமார திசாநாயாக்க தலைமையில் இடம்பெறவுள்ள மாநாடு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயாக்க (Anura Kumara Dissanayakke) தலைமையில் வங்கி மற்றும் நிதித்துறை பங்குதாரர்களின் மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த மாநாடானது இன்றையதினம் (04.04.2024) மாலை 6.30 மணிக்கு தனியார் விடுதியொன்றில் ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, இந்த மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வங்கி மற்றும் நிதி அமைப்பின் உறுப்பினர் சமீர அல்விஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இந்நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.