இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய தொடருந்து சேவை!
கொழும்பு மற்றும் பதுளைக்கிடையிலான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்துத் திணைக்களம் ‘துன்ஹிந்த ஒடிஸி’ என்ற விசேட தொடருந்தை சேவையில் இணைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த தொடருந்தானது நாளை (05) காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து தனது முதலாவது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த தொடருந்தின் திறப்பு விழாவுக்குப் பின்னர், துன்ஹிந்த ஒடிஸி பயணிகள் போக்குவரத்திற்காக ஒதுக்கப்படும், மேலதிக பயணச்சீட்டுக்கான கட்டணம் 8,000 ரூபாயாக இருக்கும் என தொடர்ந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட தொடருந்து
இந்தத் தொடருந்தில் தலா 44 இருக்கைகள் கொண்ட நான்கு அறைகள் காணப்படுகின்றன, மூன்று இரண்டாம் வகுப்பு அறைகள் மற்றும் ஒரு சிற்றூண்டிச் சாலையுடன் கூடிய மூன்றாம் வகுப்பு அறை ஆகியவையும் இதில் அடங்குவதாக கூறப்படுகிறது.
மேற்படி புகையிரதங்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு விசேட தொடருந்தையும் பதுளை நோக்கி பயணிக்கவைப்பதற்கு தொடர்ந்துத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்கள்
அதுதான் “கலிப்சோ” எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து, இந்தத் தொடருந்து சேவையும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இயற்கை அழகை ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலிப்சோ தொடருந்தானது, உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது, இந்த தொடருந்தின் பயணம் சுமார் இரண்டரை மணி நேரமாக காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.