இளமையாக மாற்றக்கூடிய மருந்தை விற்கும் கோடீஸ்வரர்., மாதம் ரூ.1 லட்சம் மட்டுமே
இளமையாக மாறுவதற்கான ரகசிய மருந்துகள் (supplements) தன்னிடம் இருப்பதாக அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
46 வயதான தொழிலதிபர் பிரையன், இந்த சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதன் மூலம் தனது வயதை 5.1 வருடங்கள் குறைந்துள்ளதாக கூறுகிறார்.
இவற்றை தயாரிக்க ஜான்சன் ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 60 கோடி) செலவு செய்வதாக கூறியுள்ளார்.
அவர் பல்வேறு மருந்துகளுடன் கூடிய பானம் கலவை (drink mix), 8 மாத்திரைகள் (tablets), protein, 8 tablets, snake oil, 67 potent medicines மற்றும் 400 calories கொண்ட சப்ளிமெண்ட்ஸ் விற்பனை செய்கிறார்.
ஒரு மாதத்திற்கான சப்ளிமெண்ட்ஸ் விலை 343 டொலராக (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 1 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயதை குறைப்பதில் ஆர்வமுள்ள ஜான்சன் பல்வேறு சோதனைகளை நடத்தி இறுதியாக இந்த சப்ளிமெண்ட்களை உருவாக்கியுள்ளார்.
இருப்பினும், அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்த எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.