திவாலான நிறுவனம்… கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிக்கும் கேட் மிடில்டனின் பெற்றோர்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர் 2.6 மில்லியன் பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன்
இளவரசி கேட் மிடில்டனின் பெற்றோர் கரோல் மற்றும் மைக்கேல் மிடில்டன் தம்பதி முன்னெடுத்து வந்த நிறுவனம் Party Pieces. தற்போது அந்த நிறுவனம் வேறு நிர்வாகத்திற்கு கைமாறியுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க Interpath Advisory என்ற நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தனர்.
தற்போது அந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 2.6 மில்லியன் பவுண்டுகள் தொகையை இதுவரை செலுத்தாமல் கடனாகவே வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் தொடர்புடைய நிறுவனத்திற்கு கட்டணமாக 51,437 பவுண்டுகள் செலுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மொத்த தொகையும் இதுவரை மிடில்டன் தம்பதியால் செலுத்த முடியாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
1987ல் மிடில்டன் தம்பதியால் Party Pieces என்ற நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. அதாவது, அவர்களின் திருமணம் முடித்து 7 ஆண்டுகளுக்கு பின்னர், Party Pieces நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில்
இந்த நிறுவனத்தில் இருந்து கிடைத்த வருவாயில் இருந்து தான் இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவரது சகோதரர்களும் பெருமைமிகு Marlborough கல்லூரியில் தங்கள் கல்வியை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி, Party Pieces நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து வேறு நிர்வாகத்திற்கும் கைமாறியது.
2023ல் வெறும் 180,000 பவுண்டுகள் தொகைக்கு James Sinclair என்பவர் Party Pieces நிறுவனத்தை கைப்பற்றினார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் இருந்த மைக்கேல் மிடில்டன் 1989ல் வேலையை விட்டுவிட்டு Party Pieces நிறுவனத்தை முழு நேரமாக முன்னெடுத்து நடத்த முடிவு செய்தார்.
கரோல் மிடில்டன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான ஊழியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.