;
Athirady Tamil News

இனி.. மகளிர் உரிமைத் தொகையில் வரும் மாற்றம் – உதயநிதி முக்கிய தகவல்!

0

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

உரிமைத் தொகை
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பாக கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கை சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வங்கிகளில் வரவு வைக்கப்படுகிறது. 3 லட்சம் மாணவர்கள் புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெற்று உள்ளனர். மாணவர்களுக்கும் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்கிறவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

உதயநிதி உறுதி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதி படைத்த மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது போன்று இன்று ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சில பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான்.

இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.