அமெரிக்க விடுத்த பகிரங்க எச்சரிக்கை! அடிபணியும் இஸ்ரேல்
தனது எல்லைகளின் ஊடாக காஸாவுக்கு உதவிப்பொருட்கள் விநியோகத்தை தற்காலிகமாக இஸ்ரேல் அனுமதிக்கவுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவலை பெஞ்சமின் நெதன்யாஹுவின் அலுவலகம் இன்று(05) குறிப்பிட்டுள்ளது.
இதன்படி காஸாவின் வடபகுதியிலுள்ள எரீஸ் கடவையை ஒக்டோபர் ஏழாம் திகதியின் பின்னர் முதல் தடவையாக இஸ்ரேல் திறக்கவுள்ளது.
உதவிப்பொருட்கள்
அத்துடன் காஸாவின் வடபகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இஸ்ரேலிய நகரான அஷ்தோத்திலுள்ள துறைமுகத்தின் ஊடாக விநியோகங்களை மேற்கொள்ளவும் இஸ்ரேல் அனுமதித்துள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜோர்தானிலிருந்து வரும் உதவிகளை அதிகரிப்பதற்கு அனுமதித்துள்ளதாகவும் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு காஸா விடயத்தில் தனது கொள்கையில் கடும் மாற்றம் ஏற்படலாமென அமெரிக்கா எச்சரித்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.