இந்தியாவின் பிரதமராவாரா எடப்பாடி பழனிசாமி !
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் பிரதமராக வர வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறித்து மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்தார்.
பாஜகவின் கூட்டணி தரப்பில் அண்ணாமலை, தமிழிசை போன்ற தலைவர்கள் போட்டியிடும் சூழலில், அதிமுகவின் தலைவர்கள் இபிஎஸ், தங்கமணி ஏன் போட்டியிட பயப்படுகிறார்கள் என விமர்சித்திருந்தார்.
இந்திய பிரதமர்
மதுரையில் அதிமுகவின் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, தினகரனின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “எடப்பாடியார் எதற்கு நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கணும்? அவசியமே இல்லை.
அதிமுக 40 இடங்களையும் வென்று இந்தியா முழுவதும் சிறிய கட்சிகள் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சியில் பிரதமராக ராஜ்ய சபா உறுப்பினராக எடப்பாடி வருவார்.
ராஜதந்திரம் மிக்க எடப்பாடி
எடப்பாடியார் அரசியல் ராஜதந்திரம் மிக்கவர், திறமையானவர் என்பதை உணர்ந்து எப்படி தேவ கௌடா, சந்திரசேகர் பிரதமர் ஆனார்களோ அப்படி எடப்பாடியை பிரதமராக்க விரும்பினால் அப்போது அவர் ராஜ்ய சபா உறுப்பினர் ஆவார்.
நீங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்கிறீர்கள் என்றால் நாங்களும் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன?” என கூறியுள்ளார்.