மன்னாரில் உணவகத்திற்கு சென்ற நபர் மீது தாக்குதல்
மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (04.04.2024) இடம்பெற்றுள்ளது.
மன்னார் – மாந்தை மேற்கு மூன்றாம்பிட்டி கிராமத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
உணவகத்தில் ஏற்பட்ட முரண்பாடு
யாழ்ப்பாணம் ஏ32 வீதி நாச்சிகுடா சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் குறித்த நபர் உணவு உண்பதற்கு சென்ற வேளை உணவில் ஈ இருப்பதை அவதானித்து உணவு பரிமாறுபரிடம் கூறியுள்ளார்.
இதன்போது உணவு பரிமாறும் நபர் சிங்கள மொழியில் கதைத்ததையடுத்து அதற்கு உணவு உண்ண சென்றவர் ஏன் சிங்கள மொழியில் கதைக்கின்றீர்கள் தமிழில் கதையுங்கள் என்று கூறி போது உணவகத்தில் நின்ற ஏனைய பணியாளர்கள் இணைந்து முரண்பட்டு குறித்த நபரிடம் கொலை மிரட்டல் விடுத்ததுடன் அதில் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து உணவக உரிமையாளரிடம் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விடயம் தொடர்பில் கூறிய போது, பொலிஸ் நிலையத்தில் முறையிட வேண்டாம் என உணவக உரிமையாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையினாலும் தாக்கப்பட்டதாலும் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
எனினும் பொலிஸார் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவை பொலீசார் பரிசோதித்தால் உண்மை வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.