;
Athirady Tamil News

யாழில். விபத்தில் முதியவர் உயிரிழப்பு – விபத்தினை ஏற்படுத்தியவர் போதைக்கு அடிமை என கண்டறிவு

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்திய நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கல்வியங்காடு புதிய செம்மணி வீதியை அண்மித்த பகுதியில் இரவு இடம்பெற்ற(04.04.2024) மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர வண்டி விபத்தில், துவிச்சக்கர வண்டியை செலுத்திய நல்லூரை சேர்ந்த 61 வயதான க. மோகனகுமார் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான 21 வயது இளைஞனை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் முற்படுத்தியவேளை , இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் மத்திய கிழக்கு நாடொன்றில் வேலை செய்து வந்த நிலையில் , விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்த வேளையிலையே இளைஞன் விபத்தினை ஏற்படுத்தி உள்ளதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.