அமெரிக்காவில் நிலநடுக்கம்: குலுங்கிய லிபர்ட்டி சிலை
அமெரிக்காவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கியுள்ளதோடு லிபர்ட்டி தீவில் உள்ள சுதந்திர சிலையும்(Statue of Liberty) குலுங்கியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது நேற்று முன் தினம் (05) இடம்பெற்றிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிலநடுக்கமானது நியூ ஜெர்சி பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலும் நியூயோர்க் நகரத்தில் 4.8 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நிலநடுக்கம்
பிலடெல்பியாவில் இருந்து நியூயோர்க் வரையிலும் மற்றும் கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் எதிரொலியால், நியூயோர்க் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
That’s video of the Statue of Liberty shaking during the earthquake yesterday is giving gen z in the club 😭 pic.twitter.com/9xkQLwmEEz
— Derek du Preez (@Derek_duPreez) April 6, 2024