ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்: 6 பேர் பலி- 10 பேர் படுகாயம்
உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென் ரஷ்யாவின் இராணுவ தளம் மீது உக்ரைன் ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியிருந்த நிலையிலேயே, உக்ரைன் இன்று(6) குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
உக்ரைனின் கார்கிவ் நகர் மீதான தாக்குதல்களை அண்மை நாட்களில் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதாக அந்த நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமான தாக்குதல்
இதற்கமைய, நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் 6 பேர் உயிரிந்துள்ள நிலையில், பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா ஒரு தீவிரவாத நாடு என்பதை கார்கிவ் நகரின் அமைதியான மக்கள் மீது மேற்கொண்ட குறித்த தாக்குதல் நிரூபிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தென் ரஷ்யாவின் இராணுவ தளம் மீது உக்ரைன் மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில், ரஷ்யாவின் 6 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யா மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 உக்ரைனிய விமானங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ரஷ்யாவின் 6 விமானங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனின் குறித்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா இதுவரை உத்தியோகப்பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
கடந்த சில நாட்களுக்குள் ரஷ்யா மீது உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதலாக இந்த தாக்குதல் கருதப்படுவதாக ரஷ்ய ராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனின் இந்த ஆளில்லா விமான தாக்குதலை எதிர்நோக்க ரஷ்யா ஆயத்தமாக இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.