அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போலி நாணயம் மற்றும் வழிப்பறி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
சிங்கள மற்றும்தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், பல்வேறு கடத்தல்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய விதம் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடித்தல்
“புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, வெளியில் வாகனங்களில் செல்லும் போது வாகனத்தை ஓட்டுபவர் மது அருந்தினாரா, அதிவேகமாக பயணிக்கிறாரா, மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கின்றாரா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
சாரதி மது அருந்தியிருப்பது தெரிந்தால், போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்வது தெரிந்தால் 1969 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குடும்ப உறுப்பினர்களுடன் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதால் ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும், எனவே புத்தாண்டு காலத்தில் கவனமாக இருக்குமாறும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.