இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள வெங்காயம்!
ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன்(Metric Ton) வெங்காயத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) அரசின் “அண்டை நாடுகளுக்கு முதலிடம்” என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவுக்கு அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்த நிலையிலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காய கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இருப்பினும், தற்போது இலங்கைக்கு பெரிய வெங்காயத்தினை ஏற்றுமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.