மனைவியை துண்டு துண்டாக வெட்டிய பிரத்தானிய பிரஜை: தண்டனை குறித்து வெளியான தகவல்
பிரித்தானியாவில் லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து பின்னர் உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசியுள்ளார்.
நிக்கோலஸ் மெட்சன் என்ற சந்தேகநபருக்கும் அவரது மனைவியான ஹோலி பிராம்லி (வயது26) என்பவருக்கும் திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் நிக்கோலஸ் தனது மனைவி வளர்த்து வந்து செல்லப் பிராணிகளையும் கொடுரமாக கொலை செய்துள்ளார்.
கொலை சம்பவம்
சம்பவத்தன்று நிக்கோலஸ், ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி குளிரூட்டியில் வைத்துள்ளார்.
அதையடுத்து, மனைவியின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் பையொன்றில் வைத்து நண்பர் ஒருவரின் உதவியுடன் ஆற்றில் வீசியுள்ளார்.
அதன்பின்னர், ஹொலி மாயமானதாக அவரது உறவினர்களால் புகார் அளிக்கப்பட்டு 8 நாட்கள் கழித்து கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி லிங்கொன் பகுதியில் உள்ள வித்ஆம் ஆற்றில் பிளாஸ்டிக் பையில் மனித உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
தண்டனை
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் அது ஹொலியின் உடல் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
அத்தோடு, மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி நண்பரின் உதவியுடன் ஆற்றில் வீசியதாக நிக்கோலஸ் மெட்சன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் திரட்டியுள்ளதுடன், இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தண்டனை விவரம் விரைவில் வெளியாக உள்ளதாக இங்கிலாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.