அணு ஆயுத போர் ஏற்பட்டால் முதலில் அழிந்து போகும் பகுதி: கசிந்த அதிர்ச்சியூட்டும் ஆவணம்
உலகில் அணு ஆயுத போர் ஏற்பட்டால் முதலில் மொத்தமாக அழிந்து போகும் பகுதி குறித்து நிபுணர்கள் பதிவு செய்து பாதுக்காப்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளது.
முதலில் அழிக்கப்படும் பகுதி
அமெரிக்க அரசாங்கத்தால் பத்திரப்படுத்தப்பட்டு வந்துள்ள அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், முதலில் அழிக்கப்படும் பகுதி என்பது அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் என்றே தெரிய வந்துள்ளது.
இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணத்தில், போர் தொடங்கியதும் வாஷிங்டன் நகரமானது ஒரு மெகாடன் தெர்மோநியூக்ளியர் குண்டு வீச்சுக்கு இலக்காகும் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தாக்குதல் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்படாது என்றும், ஒவ்வொரு வாஷிங்டன் நகர குடிமகனும் அச்சப்படுவதை விட பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
தப்ப முடியும் என்பது
மட்டுமின்றி அந்த தாக்குதலானது மில்லியன் கணக்கான டிகிரி வெப்பநிலை கொண்ட ஒரு தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த வெப்பம் ஒரு மணி நேரத்திற்கு மில்லியன் மைல் வேகத்தில் விரிவடையும் ஒரு பெரிய தீப்பந்தத்தின் ஒரு பகுதி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கான்கிரீட் சிதைந்து போகும், உலோகம் திரவமாகும் அல்லது ஆவியாகும், கற்கள் சுக்கலாகும், மனிதர்கள் எரிந்து சாம்பலாவார்கள். இதில் இருந்து தப்ப முடியும் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமே என்றும் நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அவ்வாறான ஒரு தாக்குதல் உருவாகாமல் இருக்க மனித இனம் முயற்சி முன்னெடுக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.