மே மாதம்… காதல் மனைவியின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் இளவரசர் ஹரி: நிபுணர் கணிப்பு
வேல்ஸ் இளவரசர் வில்லியம் உடனான மனக்கசப்புகளை பேசித்தீர்க்க இளவரசர் ஹரி தமது காதல் மனைவியின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக நிபுணர்கள் தரப்பு கணித்துள்ளனர்.
ஒருமித்திருந்த சகோதரர்கள் இருவரும்
முன்னர் நகமும் சதையும் போல ஒருமித்திருந்த சகோதரர்கள் இருவரும், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கலிபோர்னியாவில் மனைவியுடன் குடியேற இருப்பதாக ஹரியின் முடிவுக்கு பின்னர் மனதளவில் விலகத் தொடங்கினர்.
ஆனால் தற்போது சார்லஸ் மன்னர் மற்றும் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் பாதிப்பானது, பிரிந்திருக்கும் சகோதரர்கள் உறவில் ஒரு திருப்புமுனையாக மாறும் என்றே நம்பப்படுகிறது.
வேல்ஸ் இளவரசர் வில்லியம் உடனான உறவை மீட்டெடுக்க, தமது மனைவியின் ஒப்புதலை ஹரி பெறவேண்டிய சூழல் இருப்பதாக வாழ்க்கை வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
கேட் மிடில்டன் மற்றும் சார்லஸ் மன்னர் மனது வைத்தால், அரச குடும்பத்து சிக்கல்களை, குறிப்பாக வில்லியம் – ஹரி உறவை மீட்டெடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் முயற்சி மேற்கொண்டால், சிக்கலின்றி சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு இன்ப அதிர்ச்சி
அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது என்ன நடக்கும் என்று எவராலும் கணிக்க முடியாது என்றார். ஹரி – மேகன் தம்பதி இதற்கு முன்னரும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள்.
அது போன்ற ஒரு இன்ப அதிர்ச்சி எதிர்வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் நடக்கலாம். ஆனால் மேகன் மெர்க்கலின் ஒப்புதல் இன்றி ஹரியால் எதுவும் செய்ய முடியாத சூழல் உள்ளது என்றார்.
இருப்பினும் மே மாதம் வாய்ப்புகள் கூடி வருவதாகவும் அவர் கணித்துள்ளார். கேட் மிடில்டன் தமது நிலை குறித்து பகிரங்கமாக அறிவித்த பின்னர், முதல் முறையாக ஹரி பிரித்தானியா திரும்ப இருக்கிறார்.
மேலும், மே மாதத்திற்கு முன்பு ஹரி தமது குடும்பத்தை சந்திக்க லண்டன் திருபினாலும் வியப்பதிற்கில்லை என்றும் ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.