முல்லைத்தீவு மண்ணின் முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக அலெக்ஸ்ராஜா நியமனம்
மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இதன்மூலம் முல்லைத்தீவு மண்ணில் பிறந்த முதலாவது நீதிபதியாகவும் மேல் நீதிபதியாகவும் அவர் பெருமையை பெற்றுள்ளார்.
பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக கடமையாற்றும் அவருக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றம் வரும் நாள்களில் வழங்கி வைக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு செல்வபுரத்தில் 1976ஆம் ஆண்டு பிறந்த ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா, முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார்.
2007ஆம் ஆண்டு நீதிச் சேவை அலுவலகராக நியமனம் பெற்று நீதிபதியாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிவான் நீதிமன்றங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
அக்கரைப்பற்று மற்றும் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியிருந்தார்.