;
Athirady Tamil News

“போர் நிறுத்தம் கிடையாது” இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு

0

பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேல் மந்திரிசபை கூட்டம் நேற்று(07) நடைபெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தின் பின் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பெஞ்சமின் நெதன்யாகு இதனை தெரிவித்துள்ளார்.

தாக்குதல்
இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றதை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் தாக்குதல் வினர் கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

அத்தோடு காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100 இற்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்திருந்தாலும் இன்னும் 130 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தாக்குதல்
இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் மற்றும் அவர்களின் உடல்கள் ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகினற நிலையில் இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குகரையில் ஏற்பட மோதலில் 450 பேர் உயிரிழந்துள்ளதோடு இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியது முதல் காசா முனையில் தற்போது நடந்துவரும் போரில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் 604 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் விரைவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதுடன் இதற்காக இஸ்ரேலிய அதிகாரிகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எகிப்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு மேலும் தெரிவிக்கையில், “நாம் வெற்றிபெற இன்னும் ஒருபடியே எஞ்சியுள்ள நிலையில் வெற்றிக்காக நாம் கொடுத்த விலை வலி நிறைந்தது.

ஆயுதக்குழுவினர்
பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் விடுவிக்கும்வரை போர் நிறுத்தம் கிடையாது அத்தோடு பணய கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தயாராக உள்ளது.

ஆனால் சரணடைய இஸ்ரேல் தயாராக இல்லாததால் ஹமாஸ் வலிமைபெறும் வகையில் சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக சர்வதேச நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அது பணய கைதிகள் விடுதலைக்கான முயற்சிகளை அதிகரிப்பதோடு எங்களை யார் தாக்கினாலும் மற்றும் தாக்க நினைத்தாலும் நாங்கள் அவர்களை தாக்குவோம்.

இந்த கொள்கையை நாங்கள் அனைத்து நேரமும் பின்பற்றுவதோடு இப்போதும் பின்பற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.