;
Athirady Tamil News

உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள் எவை தெரியுமா….

0

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்வது தான் வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும்.

ஆனால் உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் நகர், சான் மரினோ, மொனாக்கோ, லிச்சென்ஸ்டீன், அன்டோரா ஆகிய நாடுகளே விமான நிலையங்கள் இல்லாத நாடுகளாகும்.

மிகச் சிறிய நாடான வத்திக்கான்
எனவே இந்த நாடுகள் குறித்தும் இங்கு விமான நிலையங்கள் இல்லாததற்கான காரணம் குறித்து நோக்குகையில்

ஐரோப்பாவில் அமைந்துள்ள உலகின் மிகச் சிறிய நாடான வத்திக்கான் நகரத்திலும் விமான நிலையம் இல்லை. இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவு 108.7 ஏக்கர் தான் ஆகவே இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.

உலகின் பழமையான நாடுகளில் ஒன்றான சான் மரினோவில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. எனவே, இங்குள்ள மக்கள் பிற நாடுகளுக்கு செல்ல இத்தாலியில் உள்ள ரிமினி விமான நிலையத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

சிறிய நாடான மொனாக்கோ
வத்திக்கான் நகரத்திற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடான மொனாக்கோ மூன்று பக்கங்களிலும் பிரான்சினால் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டிலும் ஒரு விமான நிலையம் கூட இல்லை.

ஒரு சிறிய நாடான லிச்சென்ஸ்டீன் 75 கிலோ மீற்றர் வரையான நீளத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்த நாட்டில் விமான நிலைய வசதி இல்லை. இருப்பினும், இங்குள்ள மக்கள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

பெரிய நாடான அன்டோரா
மற்ற நாடுகளைப் போல சிறிய நாடு அல்லாத அன்டோராவிலும் விமானம் நிலையம் இல்லை. ஆனால் இங்கு பல விமான நிலையங்களை உருவாக்க முடியும்.

எனினும் இங்குள்ள மலைகள் தான் பெரிய பிரச்சனை. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள இந்த நாடு மலைகளால் சூழப்பட்டதால் இங்கு விமானம் ஓட்டுவது ஆபத்தானது. அதனால்தான் இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை.

இருப்பினும் இங்குள்ள மக்கள் பார்சிலோனா, லெரிடா அல்லது வெரோனா போன்ற நகரங்களில் இருந்து விமானங்களில் பறக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டு்ளளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.