கனடா மக்களுக்கு மருத்துவ சாதனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் அந்நாட்டு சுகாதார திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில வகை மருத்துவ சாதனங்கள் பயன்படுத்துவதன்மூலம் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறக்கமின்மை பிரச்சினையினால் பாதிக்கப்பட்டோருக்க சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒமினிலெப் அட்வான்ஸ்ட் (OmniLab Advanced) என்ற கருவி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இவ்வாறு சில வகை மருத்துவ சாதனங்கள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் பயன்படுத்தும் சில மருத்துவ சாதனங்களைப் போன்றே, சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள் சிலவும் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுகாதார திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையின் பிரகாரம் மருத்துவ சாதனங்களை பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.